உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மணல் திருட்டு டிராக்டர் பறிமுதல்

மணல் திருட்டு டிராக்டர் பறிமுதல்

ஆண்டிபட்டி: அம்மச்சியாபுரம் அருகே ஆற்றில் மணல் திருடப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து க.விலக்கு போலீஸ் எஸ்.ஐ., காளிதாஸ் தலைமையில் போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். அம்மச்சியாபுரம் பாலம் அருகே சோதனையில் ஈடுபட்ட போது டிராக்டரில் எவ்வித அனுமதியும் இன்றி ஒரு யூனிட் மணல் கொண்டு சென்றதை கண்டறிந்தனர். போலீசாரை கண்டதும் டிராக்டரை நிறுத்திவிட்டு அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் பள்ளப்பட்டியை சேர்ந்த மயில்வாகனன், சீனிவாசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை