உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / துப்புரவு பணியாளர்கள் ஸ்டிரைக்: சின்னமனூரில் குப்பை தேக்கம்

துப்புரவு பணியாளர்கள் ஸ்டிரைக்: சின்னமனூரில் குப்பை தேக்கம்

சின்னமனூர்:சின்னமனூர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நகரில் குப்பை தேக்கி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இங்குள்ள கீழப்பூலானந்தபுரம், சொக்கநாதபுரம் உள்ளிட்ட பகுதிகள் நகரில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது. இப் பகுதியில் 50 ஆயிரம் மக்கள் தொகை உள்ளனர். நகரில் நாள் ஒன்றக்கு 20 டன் முதல் 30 டன் குப்பை சேகரமாகிறது. துப்புரவு பணியாளர்கள் தேவைக்கேற்ப இல்லை. இதற்கு காரணம் நகராட்சிகளின் மொத்த செலவு நகராட்சி வருவாயில் 49 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். ஆனால் நகராட்சி செலவு அதற்கு மேல உள்ளதால் புதிய பணி நியமனங்கள் செய்ய முடியவில்லை. எனவே இங்கு குப்பை அள்ளும் பணி தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் 55 துப்புரவு பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்துள்ளனர். இவர்களை பணியில் அமர்த்திய தனியார் நிறுவனம் தொழிலாளர்களுக்கான பி.எப் . தொகையை, 3 ஆண்டுகளாக செலுத்தாமல் உள்ளது. ஒவ்வொருவருக்கும் குறைந்தது ரூ.1 லட்சம் செலுத்த வேண்டியுள்ளது. இந்நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிவடையும் நிலையில் உள்ளது. எனவே பி.எப் தொகையை செலுத்த வலியுறுத்தி, ஆக. 27 முதல் துப்புரவு பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நகரில் குப்பை சேகரிப்பு பணி முடங்கியுள்ளது. நகரில் பல தெருக்களில் குப்பை அகற்றப்படாமல் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதுகுறித்து நகராட்சியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை