உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புத்தகத்திருவிழாவில் குவிந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள்

புத்தகத்திருவிழாவில் குவிந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள்

தேனி : தேனியில் நடந்து வரும் புத்தக திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.பழனிசெட்டிபட்டியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3ம் ஆண்டு புத்தக திருவிழா நடந்து வருகிறது. இவ்விழாவில் 60க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பதிப்பகங்கள் சார்பில் ஏராளமான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்வு முடிந்திருந்ததால் பள்ளி மாணவர்கள், கல்லுாரி மாணவர்கள் அதிக அளவில் புத்தக திருவிழாவிற்கு வந்தனர். தங்களுக்கு பிடித்த புத்தகங்களை விரும்பி வாங்கி சென்றனர். குடும்பத்துடன் வந்தவர்களும் புத்தகங்களை தேர்வு செய்து வாங்கினர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளை ரசித்தவாறும், சிற்றுண்டிகளை சாப்பிட்டு மகிழ்ந்தனர். சிந்தனை அரங்கம், இலக்கிய அரங்கங்களில் உள்ளூர், பிரபல பேச்சாளர்கள் பேசினர். விழா ஏற்பாடுகளை வேளாண், தோட்டக்கலை, கூட்டுறவு துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை