உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டேபிள் டென்னிஸ் போட்டியில் பள்ளி மாணவர்கள் அசத்தல்

டேபிள் டென்னிஸ் போட்டியில் பள்ளி மாணவர்கள் அசத்தல்

தேனி: மாவட்டத்தில் குடியரசு தினவிழா, பாரதியார் தினவிழா குறுவட்ட போட்டிகள் ஆகஸ்டில் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட போட்டிகளுக்கு நடந்தது.மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி முத்துத்தேவன்பட்டி வேலம்மாள் பள்ளியில் நடந்தது. போட்டிகள் 14,17,19 வயதிற்குட்பட்டு மாணவ, மாணவிகள் பிரிவுகளில் நடந்தது. மாணவர்கள் பிரிவில்14 வயதிற்குட்பட்ட ஒற்றையர் போட்டியில் துவாரகாந்த், முகமது வாசிம், பாண்டிஸ்ரீதமன் முதல் மூன்று இடங்கள் வென்றனர்.17 வயது பிரிவில் அஜய்முத்தையா, ராகுல், அபினவ் முதல் 3 இடங்கள் வென்றனர். 14, 17 வயது இரட்டையர் பிரிவில் தேனி டி.எம்.எச்.என்.யூ., வித்யாலயா பள்ளி, ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம்., மேல்நிலைப்பள்ளி, கம்பம் என்.ஏ.எம்.எம்., மேல்நிலைப்பள்ளி அணிகள் வென்றன.19 வயது பிரிவில் ஷாஜன், திருகுருநாத், ராகுல் நிதி வென்றனர். இரட்டையர் பிரிவில் தேனி வேலம்மாள் மெட்ரிக்பள்ளி, கம்பம் என்.ஏ.எம்.எம்.,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம்., மேல்நிலைப்பள்ளி அணிகள் வென்றன. மாணவிகள் பிரிவில் 14வயதிற்குட்பட்ட பிரிவில் பூஜாஸ்ரீ, யாழினிஸ்ரீ, அபிஸ்ரீ வென்றனர். தேனி டி.எம்.எச்.என்.யூ., வித்யாலயா பள்ளி, கம்பம் என்.ஏ.எம்.எம்.,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, போடி பங்கஜம் மேல்நிலைப்பள்ளி அணிகள் வென்றன.17 வயது பிரிவில் பவினா, ஜெயஹாசினி, லிதிகாஸ்ரீ வென்றனர். இரட்டையர் பிரிவில் தேனி பி.சி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, போடி பங்கஜம் மேல்நிலைப்பள்ளி, ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம்., மேல்நிலைப்பள்ளி,19 வயதிற்குட்பட்ட பிரிவில் ஓவியா, தீபிகா, மகாலட்சுமிவென்றனர். இரட்டையர் பிரிவில் போடி பங்கஜம் மேல்நிலைப்பள்ளி, தேனி பி.சி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம்., மேல்நிலைப்பள்ளி அணிகள் வெற்றி பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !