திருக்குறள் போட்டிக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
தேனி: தமிழக அரசு சார்பில் 1330 திருக்குறள்களை ஒப்புவிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.15 ஆயிரம் பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்குகிறது. இதற்காக திருக்குறள் முற்றோதுதல் பாராட்டுப்பரிசு' என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தமிழ் வளர்ச்சித்துறை இணைய பக்கம் https://tamilvalarchithurai.tn.gov.inல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் அல்லது தபால் மூலம் நவ.30க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 91596 68240 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.