உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  புத்தக திருவிழாவில் ஆர்வமுடன் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் 

 புத்தக திருவிழாவில் ஆர்வமுடன் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் 

தேனி: தேனி புத்தக திருவிழாவில் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று புத்தகங்களை வாங்கினர். மாவட்ட நிர்வாகம் சார்பில் 4ம் ஆண்டு புத்தக திருவிழா நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் துவங்கியது. விழா துவங்கிய நாளில் இருந்து பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் ஆர்வமுடன் வந்து புத்தகங்களை வாங்கி செல் கின்றனர். நேற்று பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்து வந்திருந்தனர். மாணவர்கள் பல்வேறு அரங்குகளில் சிறுகதைகள், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட புத்தகங்களை ஆர்வமாக வாங்கி சென்றனர். பல மாணவர்கள் அரங்குகளில் நின்று புத்தகங்களை வாசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ