உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சட்டசபை உறுதிமொழி குழுவிடம் பள்ளி மாணவர்கள் கோரிக்கை

சட்டசபை உறுதிமொழி குழுவிடம் பள்ளி மாணவர்கள் கோரிக்கை

சின்னமனூர் : தேனி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சட்டசபை உறுதி மொழி குழுவினரிடம், ஹைவேவிஸ் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பில் அமர்ந்து படிக்க பெஞ்ச், மின்வசதி, கூடுதல் வகுப்பறை கட்டடம் தேவை என கோரிக்கை வைத்தனர்.சட்டசபை உறுதி மொழி குழு தலைவர் வேல்முருகன் தலைமையிலான குழுவினர் நேற்று காலை ஹைவேவிஸ் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றனர். அங்கு படித்து கொண்டிருந்த மாணவர்களிடம் பேசினர். அப்போது அமர்ந்து படிக்க பெஞ்ச்,மின் வசதி இல்லை, கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டித் தர கோரினர். கலெக்டரின் நிதியில் இருந்து இருக்கைகள் உடனே வாங்கி தரவும், கூடுதல் வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்க உறுதியளித்தனர். கூடுதல் பஸ் வசதி செய்து தர போக்குவரத்து துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.பின்னர் உத்தமபாளையம் ஆர். டி. ஒ செய்யது முகமது, தாசில்தார் கண்ணன், வனத்துறை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்கள். பஸ் போக்குவரத்துக்கு உரிய ஏற்பாடு செய்யவும்,பள்ளி கட்டடம் பராமரிக்கவும், பள்ளிக்கு மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை