மேலும் செய்திகள்
காட்டு மாடு தாக்கி தொழிலாளி காயம்
13-Mar-2025
மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனில் பள்ளி மாணவி லத்திகா 14, வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அங்கு வசிக்கும் தாத்தா ராமராஜ், பாட்டி பாக்கியம் ஆகியோரின் பராமரிப்பில் இருந்த லத்திகா மூணாறில் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தார். கேரளாவில் பள்ளிகளில் தேர்வு முடிந்து ஏப்.1 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. தாத்தா, பாட்டி நேற்று வழக்கம்போல் பணிக்குச் சென்ற விட்ட நிலையில் லத்திகா வீட்டில் தனியாக இருந்தார்.மதிய உணவு அருந்த வந்த பாட்டி பாக்கியம் வீடு உள்புறமாக தாழிடப்பட்டு இருந்தால் பேத்தியை அழைத்தார். சந்தேகம் அடைந்தவர் அருகில் வசிப்பவர்களின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தூக்கிட்ட நிலையில் லத்திகா பிணமாக கிடந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
13-Mar-2025