உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கிடப்பில் கடல் விமானம் திட்டம்

கிடப்பில் கடல் விமானம் திட்டம்

மூணாறு: மூணாறு அருகே மாட்டுபட்டி அணையில் சோதனை அடிப்படையில் கடல் விமானம் இயக்கப்பட்டு எட்டு மாதங்கள் ஆகியும் தொடர் நடவடிக்கை இன்றி திட்டம் கிடப்பில் போடப்பட்டது. நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தி, சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு 'உடான்' திட்டம் மூலம் நீரிலும், தரையிலும் ஓடும் கடல் விமானம் (சீ பிளேன் ) சேவையை செயல்படுத்தி வருகிறது. கேரளாவில் அத்திட்டம் மூலம் கொச்சி, மூணாறு அருகில் உள்ள மாட்டுபட்டி அணை இடையே கடல் விமானம் இயக்க திட்டமிடப்பட்டது. அதன் சோதனை ஓட்டம் நவம்பர் 11ல் நடந்தது. கொச்சியில் அரசு வசம் உள்ள போல்ஹாட்டி பேலஸ் அருகே கடல் பகுதியில் இருந்து புறப்பட்ட விமானம் மாட்டுபட்டி அணையில் வெற்றிகரமாக இறங்கியது. இந்நிலையில் சோதனை ஓட்டம் முடிந்து எட்டு மாதங்கள் ஆகியும் தொடர் நடவடிக்கை எதுவும் இன்றி திட்டம் கிடப்பில் போடப்பட்டது. விமானத்தின் சோதனை ஓட்டத்தை கொச்சியில் தொழில்துறை அமைச்சர் ராஜீவ் தலைமையில் சுற்றுலாதுறை அமைச்சர் முகம்மதுரியாஸ் துவக்கி வைத்தார். விமானத்தில் தேவிகுளம் எம்.எல்.ஏ.ராஜா உள்பட உயர் அதிகாரிகள் எட்டு பேர் கொண்ட குழு பயணித்தனர். மாட்டுபட்டி அணையில் இறங்கிய விமானத்தை நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின், உடும்பன்சோலை எம்.எல்.ஏ. மணி ஆகியோர் தலைமையில் வரவேற்கப்பட்டது. அதனால் எவ்வித தடங்கலும் இன்றி கடல் விமானம் திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்ப்பட்டது. ஆனால் திட்டம் கிடப்பில் போடப்பட்டதால், கடல் விமானம் இயக்கப்படுமா என சுற்றுலா பயணிகள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை