பாதுகாப்பு உறுதிமொழி
தேனி: உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு தேனி வனக்கோட்டம் ஆண்டிபட்டி வனச்சரக அலுவலர் அருள்குமார், வன பணியாளர்கள் சார்பில் சுப்புலாபுரம் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களிடையே வனவிலங்கு பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடந்தது. வனவிலங்கு வாழ்விடங்களை பாதுகாப்பது, அவற்றுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை மாணவர்கள் எடுத்தனர்.