செக்யூரிட்டி கொலை தனிப்படை விசாரணை
மூணாறு : மூணாறு அருகே தேயிலை பாக்டரியின் செக்யூரிட்டி கொலை குறித்து டி.எஸ்.பி. அலெக்ஸ்பேபி தலைமையில் தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான கன்னிமலை எஸ்டேட், பாக்டரி டிவிஷனைச் சேர்ந்த ராஜபாண்டி 68, செக்யூரிட்டியாக பணியாற்றினார். அவர் நேற்று முன்தினம் சொக்கநாடு எஸ்டேட் தேயிலை பாக்டரியில் பணியில் ஈடுபட்ட நிலையில், அங்கு செக்யூரிட்டிகளுக்கு ஒதுக்கப்ப்பட்ட குடியிருப்பில் கொலை செய்யப்பட்டார். இடுக்கியில் இருந்து போலீஸ் மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தினர். இடுக்கி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடந்த பிரேத பரிசோதனையில் பலத்த ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ராஜபாண்டி தலை, கழுத்து ஆகிய பகுதிகளில் ஏழு ஆழமான காயங்கள் ஏற்பட்டு இறந்ததாக தெரியவந்தது. அவரை திட்டமிட்டு கொலை செய்ததாக சந்தேகம் எழுந்தது. மூணாறு டி.எஸ்.பி. அலெக்ஸ்பேபி தலைமையில் 16 பேர் கொண்ட தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.