உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கல்லுாரி மாணவர்களுக்கு  விதை சான்றளிப்பு பயிற்சி

 கல்லுாரி மாணவர்களுக்கு  விதை சான்றளிப்பு பயிற்சி

தேனி: தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விதை சான்றளிப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தில் குள்ளப்புரம் வேளாண் கல்லுாரி மாணவ மாணவிகளுக்கு கிராம தங்கல் திட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. உதவி இயக்குனர் சந்திரமாலா வழிகாட்டுதலில் விதை சான்று அலுவலர்கள் சன்மதி, முத்துசேகர் ஆகியோர் இணைந்து, பயிர்களுக்கான விதைகளை ஆய்வு செய்யும் விதம், திறன் கண்டறியும் செயல்பாடு, இயற்கை விவசாய நடைமுறையில் விதைகளை தேர்வு செய்வது, ஈரப்பதம் கண்டறியும் விதம், ஆய்வகம் செயல்படும் விதம் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.இதில் வேளாண் கல்லுாரியை சேர்ந்த 20 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற் றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி