மேலும் செய்திகள்
விதை முளைப்பு திறனறிய பரிசோதனை அவசியம்
11-Oct-2024
தேனி, : தேனி சுக்குவாடன்பட்டி வேளாண் வளாகத்தில் உள்ள விதைப்பரிசோதனை நிலையத்தில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி மாணவர்கள் பயிற்சிக்கு வந்திருந்தனர்.அவர்களுக்கு தரமான விதைகள் தேர்வு செய்வதில் விதைப்பரிசோதனை நிலையத்தின் பங்கு, விதைகள் பரிசோதனை செய்யும் முறை, சான்றுவிதைகளின் மாதிரிகள், ஸ்பெக்ஸ் இணையதளத்தின் பயன்பாடு, இணையதளத்தில் பரிசோதனை முடிவுகளை வழங்குதல், விதை ஈரப்பதம், புறத்துாய்மை பரிசோதனை, பிற ரக கலவன் கண்டறிதல், முளைப்புத்திறன் கணக்கிடுதல் தொடர்பான பயிற்சிகளை வேளாண் அலுவலர்கள் சத்யா, மகிஷாதேவி வழங்கினர். தோட்டக்கலை கல்லுாரி பேராசிரியை கீதாராணி பங்கேற்றார்.
11-Oct-2024