உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம்

போடி: போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் போக்குவரத்து விதி முறைகள், போதைப் பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையில் நடந்தது. போதைப் பொருள் ஒழிப்பு இயக்குநர் சிவா வரவேற்றார். போக்குவரத்து விதிமுறைகள் குறித்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தட்சிணா மூர்த்தி, போதை பொருள், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து போடி டவுன் எஸ்.ஐ., கிருஷ்ணவேணி, குடும்ப வன்முறை குறித்து குடும்ப வன்முறை தடுப்பு திட்ட ஆற்றுப்படுத்துநர் தெய்வஜோதி மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை