உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீடுதேடி ரேஷன் பொருட்கள் பயனாளிகள் குழுக்களாக பிரிப்பு

வீடுதேடி ரேஷன் பொருட்கள் பயனாளிகள் குழுக்களாக பிரிப்பு

தேனி: வீடுதேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் பணியில் இடர்பாடுகளை களைய பயனாளிகளை குழுக்களாக பிரிக்கும் பணியை கூட்டுறவுத்துறையினர் துவங்கி உள்ளனர். தமிழகத்தில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு தாயுமானவர் திட்டம் மூலம் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் திட்டம் துவங்கி உள்ளது. மாவட்டத்தில் 36ஆயிரம் ரேஷன் கார்டு தாரர்கள் இந்த திட்டத்தில் பயனாளிகளாக உள்ளனர். பொருட்கள் வினியோகம் செய்ய ஒரு ரேஷன் கார்டுக்கு ஊரக பகுதிக்கு ரூ. 40, நகர்பகுதிக்கு ரூ. 36, மலைப்பகுதிகளுக்கு ரூ. 100 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சில ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 10 அதற்கும் குறைவாக உள்ள போது வாகன வாடகை, ஆட்கள் கூலி குறைவு என புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து பயனாளிகளை குழுக்களாக பிரிக்க கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி 70 முதல் 80 பேர் கொண்ட பயனாளிகள் குழுக்களாக பிரிக்கப்படுகின்றனர். இவர்கள் அருகருகே உள்ள 2,3 ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குபவர்களாக இருப்பார்கள். மாவட்டத்தில் இத்திட்ட பயனாளிகளை கொண்டு சுமார் 370 குழுக்கள் வரை பிரித்து பொருட்கள் வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் வாடகை, ஏற்று இறக்கு கூலி பற்றாக்குறை தவிர்க்கப்படலாம் என கூட்டுறவுத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ