உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாலியல் தொல்லை:  முதியவருக்கு சிறை

பாலியல் தொல்லை:  முதியவருக்கு சிறை

தேனி : உத்தமபாளையத்தில் மதுபோதையில் 14 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த 64 வயது முதியவருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.உத்தமபாளையம் தாலுகாவை சேர்ந்தவர் 14 வயது சிறுமி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர். இவரது தோழியை பார்க்க 2024 ஏப்.14ல் மதியம் தனது வீட்டிற்கு எதிரே உள்ள வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த 64 வயது முதியவர் தனது பேத்தி மாடியில் விளையாடுவதாக கூறினார். மது போதையில் இருந்த முதியவர் சிறுமியை பின் தொடர்ந்து மாடிக்கு சென்று பாலியல் தொந்தரவு செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கீழே வந்து நடந்த விபரங்களை தாயாரிடம் தெரிவித்தார். சிறுமியின் தாய் புகாரில் முதியவரை போக்சோவில் கைது செய்தார். வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு வழக்கறிஞர் ரக்ஷிதா ஆஜரானார். நேற்று விசாரணை முடிந்து, முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார். சிறுமியின் புணர்வாழ்விற்காக ரூ.5 லட்சம் அரசு நிவாரணம் வழங்கிட வேண்டும். அதில் அபராதம் அடங்கும். மீதியுள்ள ரூ.4.75 லட்சத்தில் ரூ.1 லட்சம் சிறுமியின் தாயாரிடம் கல்வி, மருத்துவ செலவிற்காக உடனடியாக வழங்கவேண்டும். மீதியுள்ள ரூ.3.75 லட்சத்தை சிறுமி பெயரில் வங்கியில் வைப்புத்தொகையாகடிபாசிட் செய்து வட்டித்தொகை 2 மாதங்களுக்கு ஒரு முறை பெற்று பராமரிப்பு செலவிற்கு பயன்படுத்த வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை