உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / என்.எஸ்.கே.பி.பள்ளியில் குறுவட்ட தடகள போட்டி

என்.எஸ்.கே.பி.பள்ளியில் குறுவட்ட தடகள போட்டி

கூடலுார்: கம்பம் வட்டார அளவிலான குறுவட்ட தடகள விளையாட்டுப் போட்டிகள் கூடலுார் என்.எஸ்.கே.பி., மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் வெங்கட்குமார் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர் சுருளிவேல் துவக்கி வைத்தார். உடற்கல்வி இயக்குனர் கருத்தபாண்டியன் தலைமையில், உடற்கல்வி ஆசிரியர்கள் இப்போட்டிகளை நடத்தினர். கம்பம் வட்டார அளவில் உள்ள 15 க்கும் மேற்பட்ட பள்ளிகள் விளையாடின. 80 மீட்டர், 100 மீட்டர், 110 மீட்டர் தடை தாண்டும் போட்டி, 3 ஆயிரம் மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன. ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற வீரர்கள் கல்வி மாவட்ட அளவில் அடுத்த வாரம் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை