உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஒன்றிய அலுவலகம் முற்றுகை

ஒன்றிய அலுவலகம் முற்றுகை

பெரியகுளம்: பெரியகுளம் ஒன்றிய அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூ., தொழிற்சங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை சங்கத்தினர் இணைந்து, 'ஊராட்சிகளில் மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவல் பணியாளர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும்' உட்பட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை சங்கம் மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ., செயற்குழு உறுப்பினர் வெண்மணி, கவுன்சிலர் மதன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !