மேலும் செய்திகள்
தேசிய கொடி ஊர்வலம்
24-May-2025
-பெரியகுளம் : தாமரைக்குளத்தில் பா.ஜ., சார்பில் ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றி ஊர்வலம் நடந்தது. இந்திய இராணுவத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் தேசியக்கொடி, பிரதமர் மோடி படத்துடன் ஊர்வலம் சென்றனர். முன்னாள் இராணுவ கேப்டன் சரவணன் தலைமை வகித்தார். முன்னாள் இராணுவ வீரர் கார்த்திக் முன்னிலை வகித்தார். தாமரைக்குளம் காளியம்மன் கோயில் அருகே துவங்கிய ஊர்வலம் அம்மன் சன்னதி தெரு, காந்திஜி ரோடு உட்பட முக்கிய வீதிகள் வழியாக சென்று சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நிறைவு பெற்றது.பா.ஜ., மாவட்ட மகளிரணி துணைத்தலைவர் செல்வராணி, ரோட்டோரம் நின்றிருந்த பெண்களுக்கு குங்குமம் வழங்கினார். பா.ஜ., நிர்வாகிகள் ரவி, தர்மராஜன், வெற்றிச்செல்வன், பெரியகுளம் நகர பொதுச்செயலாளர் வீரபத்திரன் பங்கேற்றனர்.--
24-May-2025