தின்பண்டகள் அழிப்பு
தேனி:கம்பம் நகராட்சி, அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள துரித உணவு கடைகள் ஓட்டல்களில் உணவு தயார் செய்யும் இடங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் சசிதீபா, அலுவலர் ரமேஷ் ஆய்வு செய்தனர். அப்போது செயற்கை நிறமிகள் அதிக பயன்பாடு, காலாவதியான உணவுகள் என 17 கிலோ தின்பண்டங்கள் பறிமுதல் செய்து அழித்தனர். இவற்றில் உணவு மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.