உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஊர்க்காவல் படைக்கு வீரர்கள் நேர்காணல்

ஊர்க்காவல் படைக்கு வீரர்கள் நேர்காணல்

தேனி : தேனி ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கான உடற்தகுதி, நேர்காணலில் 95 பேர் பங்கேற்றனர்.தேனி மாவட்ட ஊர்க்காவல் படையில் 29 ஆண்கள், 3 பெண்கள் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதற்காக விண்ணப்பங்கள் வரவேற்பதாக எஸ்.பி., சிவபிரசாத், சரக தளபதி அஜய்கார்த்திக்ராஜா அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.இதில் 105 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பதாரர்களுக்கான உடற்தகுதி மற்றும்நேர்காணல் தேர்வு நேற்று தேனி ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. ஏ.டி.எஸ்.பி., சுகுமாறன்தலைமை வகித்தார். மதுவிலக்கு அமலாக்கத்துறை டி.எஸ்.பி., ரவிசக்கரவர்த்தி, வட்டார தளபதி செந்தில்குமார் முன்னிலையில் நடந்தது. இதில் ஆண்கள் 67, பெண்கள் 28 பேர் என 95 பேர் பங்கேற்றனர். தேர்வானவர்கள் வீடுகளுக்கு விரைவில் பதிவுத் தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை