உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பணம் கேட்டு தந்தையை வெட்டிய மகன் கைது

பணம் கேட்டு தந்தையை வெட்டிய மகன் கைது

உத்தமபாளையம்: ராயப்பன்பட்டி ஓசான காலனி தெருவை சேர்ந்தவர் பெருமாள் 60, இவரது மகன் ரஞ்சித் 29, வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்துள்ளார். சொத்தில் தனது பங்கை பிரித்து தர கோரி தந்தையுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். சில மாதங்களுக்கு முன் பெருமாள் தனது சொத்தில், அவரது பங்கை பிரிந்து கொடுத்துள்ளார். ரஞ்சித் தனது பங்கை விற்று பணத்தை செலவு செய்துவிட்டு மீண்டும் தன் தந்தையுடன் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த ரஞ்சித் தனது தாயாரை எங்கே என கேட்டு அரிவாளை எடுத்துக் கொண்டு தாயை வெட்டப் போகிறேன் என கூறி சென்றுள்ளார். பின்னால் சென்று தடுத்த தந்தை பெருமாளை அரிவாளால் தலையில் வெட்டியுள்ளார். காயமடைந்த பெருமாள் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் ரஞ்சித்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி