உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மகன் மாயம்: தந்தை புகார்

 மகன் மாயம்: தந்தை புகார்

தேவாரம்: தேவாரம் அருகே டி..சிந்தலைச்சேரியை சேர்ந்தவர் சலேத்து 69. மகன் அந்தோணி டென்னிஸ் 33. கொத்தனார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. 7 மாதங்களுக்கு முன்பு சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். வேலைக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. ஏழு மாதமாக பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. சலேத்து புகாரில் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன அந்தோணி டென்னிஸ்யை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ