வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள்
தேனி: மாவட்டத்தில் டிச., 27,28, ஜன., 3,4 ஆகிய 4 நாட்கள் ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: வரைவு வாக்காளர் பட்டியில் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. பட்டியலில் பெயர் இருப்பதை வாக்காளர்கள் பி.எல்.ஓ.,க்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில் வைக்கப் பட்டுள்ள வாக்காளர் பட்டியல், ஆன்லைன் மூலம் சரிபார்த்துக்கொள்ளலாம். மாவட்டத்தில் உள்ள 1394 ஓட்டுச்சாவடி மையங்களிலும் நடத்தப்பட உள்ளது. முகாம் டிச., 27,28, ஜன., 3,4 ஆகிய சனி, ஞாயிறு நாட்களில் முகாம் நடக்கிறது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூன்றில் ஒரு பகுதி சரிபார்க்கப்பட்டுள்ளது என்றனர்.