வாக்காளர்பட்டியல் சிறப்பு திருத்தபணி இன்று துவக்கம் வீடுதோறும் படிவங்கள் வழங்க நடவடிக்கை
தேனி: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி இன்று துவங்குகிறது. இதற்காக அந்தந்த பகுதி பி.எல். ஓ.,க்கள் வீடுகள் தோறும் சென்று வாக்காளர்களுக்கு தலா இரு படிவங்கள் வழங்குகின்றனர். தமிழகத்தில் இன்று வாக்காளர்பட்டியில் சிறப்பு திருத்த பணிகள் துவங்கிறது. இந்த பணியில் பி.எல்.ஓ.,க்கள், சூப்பர்வைசர்கள், வருவாய்த்துறை, கல்வித்துறை பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். இதுபற்றி தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: தாலுகா அலுவலகங்கள், பி.எல்.ஓ., சூப்பர்வைசர்கள் மூலம் பி.எல்.ஓ.,க்களிடம் வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்று முதல் வீடுகள் தோறும் பி.எல். ஓ.,க்கள் படிவங்கள் வழங்குவார்கள். ஒரு வாக்காளர்களுக்கு இரு படிவங்கள் வழங்கப்படும். படிவங்கள் வழங்கும் பணியை 5 நாட்களில் முடிக்க திட்ட மிட்டுள்ளோம். வாக்காளர்கள் பூர்த்தி செய்ய படிவத்தில் ஒன்றினை பி.எல்.ஓ.,க் களிடம் வழங்க வேண் டும். எந்த அடையாள அட்டை நகல்களும் படிவத்துடன் இணைத்து வழங்க தேவையில்லை. வாக்காளர்கள் வழங்கி உள்ள முகவரிக்கு குறைந்த பட்சம் மூன்று முறை செல்லுமாறு பி.எல்.ஓ.,க் களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். ஒவ்வொரு பி.எல்.ஓ.,வும் அதிகபட்சம் 1200 வாக்காளர்களுக்கு படிவங்கள் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.