உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மந்தை குளம் கரையில் கல் பதிக்கும் பணி தீவிரம்

மந்தை குளம் கரையில் கல் பதிக்கும் பணி தீவிரம்

தேனி: அல்லிநகரம் மந்தைகுளம் கரையில் கல்பதிக்கும் பணி ஒருமாதத்தில் முடியும் என நீர்வளத்துறையினர் தெரிவித்தனர். அல்லிநகரம்மந்தை குளத்தின் பக்கவாட்டு கரையைபலப்படுத்தி, கற்கள் பதிக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குளக் கரைகளின் பக்க வாட்டு பகுதிகள் சீரமைக்கும் பணி கடந்த வாரம் துவங்கியது. தற்போது கரையின் பக்கவாட்டு பகுதியில் கல் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இது பற்றி நீர்வளத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 'குளத்தின் 500 மீ., நீளத்திற்கு கரையின் பக்கவாட்டில் கற்கள் பதிக்கப்பட உள்ளது. ஒரு மாதத்தில் கற்கள் பதிக்கும் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம். இது தவிர ஆக்கிரமிப்பில் உள்ளவர்களுக்கு வேறு இடங்களில் வசதி ஏற்படுத்தி தருமாறு வருவாய்த்துறைக்கு பரிந்துரை செய்துள்ளோம். ஆக்கிரமிப்புகள் அகற்றிய பின் கண்மாய் முழுவதும் கற்கள் பதிக்கும் பணி தொடர வாய்ப்புள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை