உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மாணவர் தற்கொலை

 மாணவர் தற்கொலை

கம்பம்: கம்பம் பாரதியார் நகரில் வசிக்கும் பெயின்டிங் தொழிலாளி மாரியப்பன். இவரது மகன் ரோஹித் 19, தேனியில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். பாலிடெக்னிக்கில் இருந்து வீடு திரும்பியவுடன், நண்பர்களுடன் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு தாமதமாக வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ரோஹித், ஜசக் போதகர் தெருவில் உள்ள தங்களின் பழைய வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்ற மகன் வீடு திரும்பாததால் பல இடங்களில் தேடி பழைய வீட்டிற்கு சென்று பார்த்த போது, மகன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி