தேனி குறுவட்ட போட்டிகளில் ஆர்வமாய் பங்கேற்ற மாணவர்கள்
தேனி : தேனியில் நடந்த குறுவட்ட குழுப்போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று திறமையை வெளிப் படுத்தினர். தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான கோ கோ போட்டி நடந்தது. போட்டிகள் 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் நடந்தது. மூன்று பிரிவுகளிலும் நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம் வென்றது. அனைத்து போட்டிகளிலும் முத்துத்தேவன்பட்டி டி.எம்.எச்.என்.யூ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி இரண்டாம் இடம் வென்றது. போட்டிகளை உடற்கல்வி ஆசிரியர் கணேஷ்குமார் ஒருங்கிணைத்தார். தேனி மேரிமாதா மெட்ரிக் பள்ளியில் மாணவிகளுக்கான கூடைப்பந்து, மாணவர்களுக்கான வாலிபால் போட்டிகள் நடந்தது. கூடைப்பந்து போட்டியில் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் நாகலாபுரம் பாரத் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், தேனி நாடார் சரஸ்வரதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 2ம் இடம் வென்றன. 17 வயது பிரிவில் தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடம், நாகலாபுரம் பாரத் வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி 2ம் இடம் வென்றன. 19 வயது பிரிவில் நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், முத்துதேவன்பட்டி டி.எம்.எச்.என்.யூ., மெட்ரிக் பள்ளி 2ம் இடம் வென்றன. வாலிபால் போட்டியில் 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், தேனி மேரிமாத மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2ம் இடம் வென்றன. 19 வயதிற்குட்பட்ட பிரிவில் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி முதலிடமும், நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 2ம் இடம் வென்றன.