மேலும் செய்திகள்
டேபிள் டென்னிஸ் சென்னை வீரர்கள் அபாரம்
24-Jun-2025
தேனி: தேனி குறுவட்ட அளவில் நடந்த சிலம்பம், செஸ் போட்டிகளில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.தேனி மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேனி குறுவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் குறுவட்ட அளவில் 20 பள்ளிகளை சேர்ந்த 230 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகள் 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளில் நடந்தன. இது தவிர 45, 50, 60 கிலோ எடை பிரிவுகளிலும் போட்டிகள் நடந்தன. ஒற்றை தொடுமுறை, ஒற்றை கம்பு சுற்றுதல், அலங்கார சுற்று உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. போட்டிகளில் நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 14 போட்டிகளில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றது. மாணவர்களுக்கான செஸ் போட்டியில் 11 வயது பிரிவில் பிரித்வி, ரிஷிஆனந்தன், செல்வநிரஞ்சன், 14 வயது பிரிவில் ரகுநாத், ராஜாமுகமது, ஹரிபிரசாத், 17 வயது பிரிவில் தனுவிஷ்ணு, பிரியதர்ஷன், சிவரூபன், 19 வயது பிரிவில் மாணவர்கள் தேவதர்ஷன், விக்னேஷ், பிரகலாதன் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றனர்.மாணவிகளுக்கான செஸ் போட்டியில் 11 வயது பிரிவில் மோனிஷா, வர்னிகா, 3ம் இடத்தை ஷெரினா அலைஸ், விதுஷலா கோல்டா வென்றனர். 14 வயது பிரிவில் ரியாஸ்ரீ, தன்யாஸ்ரீ, சுபவர்ஷினி, 17 வயது பிரிவில் சியோனிகா, ப்ருந்தியா, கனிஸ்க், 19 வயது பிரிவில் ஹர்சினி, தக்ஷயா, கீர்த்தனா ஷிதிவானி, ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர். உடற்கல்வி ஆசிரியர்கள் முத்துக்குமார், பவுன்ராஜ், கணேஷ் உள்ளிட்டோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.
24-Jun-2025