உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெற்றோருடன் கோபித்துக்கொண்டு சென்னை சென்ற மாணவிகள் மீட்பு

பெற்றோருடன் கோபித்துக்கொண்டு சென்னை சென்ற மாணவிகள் மீட்பு

பெரியகுளம் : பெற்றோருடன் கோபித்துக்கொண்டு சென்னைக்கு சென்ற 13 வயது பள்ளி மாணவிகள் இருவர் 14 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய 7 ம்வகுப்பு பள்ளி தோழிகள் இருவர் நேற்று முன்தினம்பள்ளி முடிந்து, பெற்றோர்களிடம் டியூஷன் செல்வதாக கூறி சென்றனர். இவர்கள் டியூஷன் செல்லாமல் மாலை 6:00 மணிக்கு புத்தகபையுடன் பெரியகுளத்திலிருந்து திண்டுக்கல் சென்று, அங்கிருந்து அரசு பஸ்சில் சென்னை சென்றனர். இரவு 8:00 மணிக்கு பெற்றோர்கள் டியூஷன் முடிந்து பிள்ளைகள் வர தாமதமானதால் டியூஷன் ஆசிரியரிடம் விசாரித்தனர். ஆசிரியர் மாணவிகள் இருவரும் டியூஷனுக்கு வரவில்லை என்றார். மாணவிகளின் பெற்றோர்கள் தென்கரை போலீசில் புகார் தெரிவித்தனர்.தென்கரை எஸ்.ஐ., கர்ணன் மற்றும் போலீசார் இருவர் காரில் மாணவிகளை வெளியூரில் தேடுவதற்கு தயாராகினர்.இரு மாணவிகளில் ஒருவர் கொண்டு சென்ற அலைபேசி எண்ணின் இருப்பிடத்தை கண்காணித்தார். அலைபேசி சிக்னல் திண்டுக்கல், திருச்சி ரோட்டில் சிக்னல் கிடைப்பதை கண்டறிந்தனர். எஸ்.ஐ., கர்ணன், காரில் திண்டுக்கல்லிருந்து கண்காணித்தபடியே சென்னை நோக்கி சென்றனர். நேற்று காலை 7:00 மணிக்கு சென்னை கிளாம்பாக்கம் பஸ்ஸ்டாண்ட்டில் பஸ்சில் இறங்கிய இரு மாணவிகளை கண்டுபிடித்தனர். அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து பெரியகுளம் அழைத்து வரப்பட்டனர். 14 மணி நேரத்தில் இரு மாணவிகளை கண்டுபிடித்து போலீசாருக்கு பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ