மேலும் செய்திகள்
மாவட்ட தடகள போட்டி; வாளவாடி பள்ளிக்கு பதக்கம்
02-Sep-2025
ஆண்டிபட்டி; தேசிய அளவிலான 'கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்' போட்டியில் ஆண்டிபட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டி மாணவர்கள் வசுமதி, ஜீவிதன் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர். தேசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் ஆகஸ்ட் 27 முதல் 31 வரை நடந்தது. 1600 பேர் பங்கேற்ற போட்டியில், தேனி மாவட்ட அமச்சூர் கிக் பாக்ஸிங் அசோசியேஷன் சார்பில் மாநில போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் வசுமதி, ஜீவிதன், கிருபா ஸ்ரீ, வினேஷ்பாலாஜி, ரிகாஸ்ரீ, இந்துஜா, யாழினி, சம்சிதா, சின்னதுரை, ரித்திஷ் குமார் ஆகியோர் 15 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தேசிய அளவில் சென்னையில் நடந்த போட்டியில் பங்கேற்றனர். இதில் மாணவர்களில் வசுமதி, ஜீவிதன் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கன்னியப்பபிள்ளைபட்டியில் நடந்த பாராட்டு விழாவில் தேனி மாவட்ட அமெச்சூர் கிக் பாக்ஸிங் அசோசியேசன் தலைவர் மகாராஜன் தலைமை வகித்தார். பயிற்சியாளர் துரைமுருகன், துணை பயிற்சியாளர்கள் ஜெயவேல், சபரீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள், பதக்கம் வென்ற மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
02-Sep-2025