உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தற்கொலை முயற்சி: காப்பாற்ற முயன்றவருக்கு மிரட்டல்

தற்கொலை முயற்சி: காப்பாற்ற முயன்றவருக்கு மிரட்டல்

தேனி : உத்தமபாளையத்தில் அலைபேசி டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயற்சித்தவரை காப்பாற்ற டவரில் ஏறியவரை கம்பியால் கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.கலிமேட்டுப்பட்டி அப்தாகீர் 59. இவரது நிலம் தண்ணீர் தொட்டி தெரு அருகே உள்ளது. அதனை கம்பத்தை சேர்ந்த செல்லத்துரைக்கு ரூ.50 லட்சத்திற்கு கிரையம் பேசி, அதில் ரூ30 லட்சத்தை அப்தாகீர் பெற்றார். மீதித்தொகை ரூ. 20 லட்சத்தை அப்தாகீரை வாங்க விடாமல் மகன் அஜ்மீர், செல்லத்துரையிடம், 'மீதித்தொகையை என்னிடம் தர வேண்டும்', என பிரச்னை செய்துள்ளார். இதனால் அப்தாகீர், தனது மகன் மீது நடவடிக்கை எடுக்க போலீசார், அதிகாரிகளிடம் புகார் அளித்தார். நடவடிக்கை இல்லை.இதனால் அப்தாகீர், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உத்தமபாளையம் நுகர்பொருள் கிட்டங்கி அருகில் உள்ள அலைபேசி டவரில் ஏறி தற்கொலைக்கு முயற்சித்தார். அவரை அதேப்பகுதியை சேர்ந்த பாவா பக்ருதீன் 39, டவரில் ஏறி, தற்கொலை செய்வதை தடுக்க முயற்சித்தார்.ஆத்திரமடைந்த அப்தாகீர் அவரை திட்டி, கீழே இறங்கி வந்து இரும்பு கம்பியை எடுத்து பாவா பக்ருதீனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். உத்தமபாளையம் போலீசார் அப்தாகீர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ