கோடைகால பயிற்சி நிறைவு
தேனி : தேனி ஜவஹர் சிறுவர் மன்றம், கலை பண்பாட்டுத்துறை சார்பில் பழனிசெட்டிபட்டியில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால இலவச பயிற்சி வகுப்புகள் நடந்தது. விழாவிற்கு ஆர்.எஸ்., பள்ளி தாளாளர் ராஜேந்திரபிரசாத் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். ஆசிரியர்கள் தனுஷ்கோடி, ராஜலட்சுமி, நாகலட்சுமி, ஜோசப் பயிற்சி அளித்தனர். திட்ட அலுவலர் சுகுமார் ஒருங்கிணைத்தார்.