ஆசிரியர் மேம்பாடு பயிற்சி மையம்
போடி : போடி அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல், தொடர்பியல் துறை சார்பில் வளர்ந்து வரும் செயற்கை கோள் தொழில் நுட்பம் அதன் பயன்பாடுகள் குறித்து ஆசிரியர் மேம்பாடு பயிற்சி முகாம் கல்லுாரி முதல்வர் வசந்த நாயகி தலைமையில் நடந்தது. பேராசிரியர் ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் கலைவாணி வரவேற்றார். புதுச்சேரி என்.ஐ.டி., கல்லூரி பேராசிரியர் லட்சுமி சுதா, விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் பேராசிரியர் சதீஷ்குமார் செயற்கைகோள் தொழில் நுட்பம் அதன் பயன்பாடுகள் குறித்து பேசினர். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.