ஆசிரியர் பயிற்சி முகாம்
தேனி: மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் தேனி, கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் மற்றும் ஐசிடி அகாடமி இணைந்து ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடத்தியது. கடந்த ஜன. 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை 5 நாட்கள் நடந்தது. இம்முகாமில், மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., யைசேர்ந்த 35 ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்ற ஆசிரியர்களை தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள் சாமி, பொது செயலாளர் மகேஷ், பாலிடெக்னிக் செயலர் சீனிவாசன், இணை செயலர் ரவிச்சந்திரன், பொருளாளர் தாமரைக்கண்ணன் மற்றும் முதல்வர் தர்மலிங்கம் ஆகியோர் வாழ்த்தினர்.