மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
16-Aug-2025
தேனி: அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் பள்ளியில் தேசிய ஆசிரியர் தின விழா நடந்தது. செயலாளர் பாக்கியகுமாரி முன்னிலை வகித்தார். முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பள்ளி முதல்வர் பரந்தாமன் பேசினார். ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.பள்ளி துணை முதல்வர் வினோத்குமார், ஏற்பாடுகளை மேலாளர் கார்த்திகேயன் செய்திருந்தார். சீலையம்பட்டி இந்து நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா பள்ளிச் செயலாளர் சண்முகநாதன் தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியர் சோமசுந்தரபாண்டியன் வரவேற்றார். ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள் குறித்து சிறப்புகளை எடுத்துரைத்தனர். ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின பரிசுகளை பள்ளிச் செயலர் வழங்கினார். மாணவர்கள் ஆசிரியர்கள் இணைந்து, அத்தப்பூ பூக்கோலம் இட்டு, விழா நடந்தது.
16-Aug-2025