| ADDED : மார் 02, 2024 04:40 AM
தேனி : தேனி சி.இ.ஓ., அலுவலகம் முன், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், 8 நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கி உள்ளனர். உண்ணாவிரதத்திற்கு மாவட்டத் தலைவர் ஜெயராணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வீரேந்திரபாபு முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து, மாவட்ட துணைச் செயலாளர் பெருமாள், மாநில செயற்குழு உறுப்பினர் சிலம்பரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடந்த உண்ணாவிரதத்தை முடித்து கொண்டு, சென்னையில் நடக்க உள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு சென்றனர்.