உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கோயில் கும்பாபிஷேகம்

 கோயில் கும்பாபிஷேகம்

மூணாறு: மூணாறில் சக்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. நகரின் மையப்பகுதியில் உள்ள கோயிலில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் துவங்கி விக்னேஷ்வர பூஜை, கிராம வாஸ்து ஹோமம், திருஷ்டி பூஜை, சுத்தி கலச பூஜை உள்பட பல்வேறு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தன. நேற்று காலை கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. அதன்பின் விநாயகருக்கு 16 வகை அபிஷேகங்கள், தீபாராதனை ஆகியவற்றுடன் சிறப்பு பூஜை நடந்தது. கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் பங்கேற்று விநாயகரை வழிபட்டனர். அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் முக்கியஸ்தர்கள் பழனிசாமி, விஜயகுமார், செல்வம், ஆனந்த், கண்ணன் ஆகியோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை