மேலும் செய்திகள்
ஆற்றில்குளிக்க சென்ற மாணவர் மாயம்
01-Dec-2025
தேனி: தேனி முல்லைப் பெரியாற்றில் காணாமல் போன சிறுவன் அர்ஜூனை 14, பேரிடர் மீட்பு படையினர் குன்னுார் முதல் வைகை அணை வரை தேடியும் கிடைக்கவில்லை. தேனி சுப்பன் தெரு அழகர்சாமி மகன் அர்ஜூன். இவர் முல்லைப் பெரியாற்றில் நவ.30ல் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கினார். போலீசார், தீயணைப்புத்துறையினர் தேடியும் கிடைக்க வில்லை. நேற்று முன்தினம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சுப்பன் தெரு முல்லைப் பெரியாற்றுப் பகுதியில் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை குன்னுார் பாலம் முதல்அணையின் பின்புற சுவர் முதல் 2.6 கி.மீ., துாரத்திற்கு 2 ரப்பர் படகுகளுடனும், நீந்தியும் தேடினர். தேடுதலில் பெற்றோரை உடன் அழைத்துச் சென்றனர். இதுவரை எந்த அடையாளங்களும் தெரியவில்லை. பெற்றோர் மிகுந்தவேதனை அடைந்தனர். தேடுதலில் சிறுவனின் அடையாளங்கள் கண்டறியவில்லை என கலெக்டர், எஸ்.பி.,க்குஅறிக்கை அளித்துவிட்டு, படை வீரர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
01-Dec-2025