உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட வேண்டும் வலுக்கும் பொது மக்கள் கோரிக்கை

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட வேண்டும் வலுக்கும் பொது மக்கள் கோரிக்கை

உத்தமபாளையம்: 'உத்தமபாளையம் பேரூராட்சியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் விரைவில் அமைக்க வேண்டும்.' என, பொது மக்கள் கோரிக்கை வலுத்துள்ளது.இப்பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் உட்கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.29.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உறைகிணறு அமைத்தல், பைப் லைன் பதித்தல், மெயின் பகிர்மான குழாய் அமைப்பது, மேல்நிலைத் தொட்டிகள் கட்டுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தினமும் 25 லட்சம் லிட்டர் பம்பிங் செய்து வினியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே 10 லட்சம் லிட்டர் விநியோகிக்கப்படுகிறது. இந்த புதிய திட்டத்தில் சிறப்பம்சமாக ரூ. 5 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று அமைக்க, முடிவு செய்யப்பட்டு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டன. இதன் மூலம்முல்லைப் பெரியாற்றில் இருந்து 'பம்பிங்' செய்யப்படும் தண்ணீரை, சுத்திகரிப்பு செய்து விநியோகம் செய்யப்படும்.சுத்திகரிப்பு நிலையம் உத்தமபாளையம் முத்து கருப்பணசாமி கோயில் அருகில் கால்நடை மருந்தகம் அருகில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டு ஒராண்டிற்கு மேல் ஆகியுள்ளது. அம்ரூத் திட்ட பணிகளை - மேற்கொள்ளும் ஒப்பந்தகாரரையும் காணவில்லை. பேரூராட்சி நிர்வாகமும் செயலிழந்துள்ளது. சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணிகளை உடனே துவக்க கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை