உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காங்., கையெழுத்து இயக்கம்

காங்., கையெழுத்து இயக்கம்

தேனி : தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று முன்தினம் தேனியில் கையெழுத்து இயக்கம் நடந்தது. பழனிசெட்டிபட்டியில் ஓட்டலில் காங்., கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மாவட்டத்தில் 50 ஆயிரம் கையெழுத்து பெறுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. காங்., சட்டமன்ற குழுத்தலைவர் ராஜேஸ்குமார், மாவட்ட துணைத் தலைவர் சன்னாசி, செயலாளர் சம்சுதீன், நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், கோபிநாத், தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து பங்களாமேடு முதல் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை இதே கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலம் சென்றனர். பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பொது மக்களிடம் கையெழுத்து பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை