உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இன்ஸ்டாவில் பெண்ணின் ஆடியோ வெளியிட்டவர் கைது

இன்ஸ்டாவில் பெண்ணின் ஆடியோ வெளியிட்டவர் கைது

தேனி:தேனியில் தன்னுடன் பழகிய இளம்பெண் திருமணம் செய்யமறுத்ததால் அவருடன் பேசிய ஆடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி பொதுவெளியில் வெளியிட்ட ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நேருஜி நகரை சேர்ந்த வாலிபர் ஆகாஷை 21, போலீசார் கைது செய்தனர்.தேனியை சேர்ந்த 20 வயது இளம் பெண், கோவையில் பி.எஸ்சி., நர்சிங் படிக்கிறார். இவருக்கு ஆகாஷூடன் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 9 மாதங்களாக இருவரும் பழகினர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்ளும்படி அவரை ஆகாஷ் வற்புறுத்தினார். இதற்கு மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆகாஷ், இன்ஸ்டாகிராமில் இளம்பெண் தன்னிடம் பேசிய சில ஆடியோ பதிவுகளை பதிவேற்றி பொது வெளியில் வெளியிட்டார். பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் தாயார் தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் செய்தார். எஸ்.பி., உத்தரவில் தேனி சைபர் கிரைம் போலீசார் அரங்கோணம் சென்று ஆகாஷை கைது செய்து தேனி தப்புக்குண்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி