உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மழையில் கற்கள் பெயர்ந்து கரடு,முரடான ரோட்டால் சிரம ம் அரண்மனைப்புதுார் ஊராட்சி இந்திரசேனா தெரு குடியிருப்போர் குமுறல்

மழையில் கற்கள் பெயர்ந்து கரடு,முரடான ரோட்டால் சிரம ம் அரண்மனைப்புதுார் ஊராட்சி இந்திரசேனா தெரு குடியிருப்போர் குமுறல்

தேனி : 'மழையால் சேதமடைந்த தார் ரோடுகள், வடிகால் வசதியின்றி தெருக்களில் ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு, குடியிருப்பு பகுதியில் புதர் மண்டியுள்ளதால் விஷப்பூச்சிகள் உலா, தெரு நாய்களால் தொல்லை' என்பன உள்ளிட்ட பல்வேறு வசதி குறைபாடுகளால் தேனி அரண்மனைப்புதுார் ஊராட்சி 6வது வார்டு முல்லைநகர் இந்திரசேனை 6வது தெருவில் வசிக்கும் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.முல்லை நகரில் மெயின் ரோட்டில் 19க்கும் மேற்பட்ட இடங்களில் மழை காரணமாக ரோடு குண்டு குழியுமாக மாறி சேதமடைந்துள்ளன. இந்திரசேனா 6வது தெருவில் வசிக்கும் குடியிருப்போர் குருசாமி, ராமராஜ், டேனியல், சஞ்சய்கிஷார், எலிசபெத் ஆகியோர் அப்பகுதியில் அடிப்படை பிரச்னைகள் குறித்து கூறியதாவது:சாக்கடை வசதியில்லைஇந்திர சேனை 6வது தெரு குடியிருப்புப் பகுதியில் தெருக்கள் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி தெரு தாழ்வாக அமைந்துள்ளது. இதனால் மழை நீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தார்ரோடு சேதமடைந்து, சரளைக் கற்கள் பெயர்ந்து ரோடு முழுவதும் கற்களாக பரவி உள்ளன. இதனால் டூவீலரில் சென்று வீடு திரும்பும் நபர்கள் சிறு, சிறு விபத்துகளில் சிக்கி, காயம் ஏற்படுவது தொடர்கிறது. இதனால் ரோட்டை சீரமைக்கவும், தெருவில் கழிவுநீர் செல்ல சாக்கடை கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். ஊராட்சி நிர்வாகத்திடமும், வார்டு உறுப்பினரிடமும் முறையாக எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை இல்லை.அரசு பஸ் சேவை தேவைஇப் பகுதியில் வசிக்கும் மக்கள் அதிகளவில் தேனியில் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். இதில் அதிகளவில் பெண்கள் வேலை செய்கின்றனர். பணி முடித்து இரவு 9:00 முதல் 10:30 வரை வீடு திரும்புகின்றனர். இவர்களுக்கு போதிய பஸ் வசதி இல்லை. இவர்கள் வயல்பட்டி மெயின் ரோட்டில் இறங்கி, குடியிருப்பு பகுதிக்கு நீண்ட துாரம் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. தேனி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து முல்லை நகர் பகுதிக்கு அரசு டவுன் பஸ் சேவை துவக்க வேண்டும். டவுன் பஸ் வசதி செய்திட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வீட்டு வசதி வாரியத்தில் இருந்து பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட வீடுகள் பயன்பாடு இல்லாமல் புதர் மண்டி பல வீடுகள் உள்ளன. இதுகுறித்து பயனாளர்களிடம் வீட்டு வசதி வாரியம் பேசி, புதர் மண்டியுள்ள வீடுகளை சுத்தம் செய்ய உத்தரவிட வேண்டும். இதனால் பாம்பு, விஷப்பூச்சிகளின் கூடாரமாக வீடுகள் மாறிவருகின்றன. வீட்டு வசதி வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை