பயனற்ற சமுதாய சமையல் கூடம் : பயன்பாட்டிற்கு வருமா
சின்னமனூர்: சின்னமனூரில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய சமையலறை கட்டடம் பயன்பாடு இன்றி உள்ளது. இதனை மாற்றுப் பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னமனூர் நகராட்சியில் வண்டிப்பேட்டையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் சமுதாய சமையலறை கட்டடம் கட்டப்பட்டது. கடந்த தி.மு.க. ஆட்சியின் போது மாணவர்களின் காலை உணவு திட்டத்திற்காக இச் சமையலறை கட்டப்பட்டது. சமுதாய சமையலறை கட்டப்பட்டதில் இருந்தே பயன்படுத்தாமல் பூட்டி வைத்துள்ளனர். இதனால் சமூக விரோதிகள் இரவில் தவறான காரியங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஜன்னல்கள், கதவுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. சமையல் பணிகள் அப்போது தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதால், சமையலறைக்கு வேலை இல்லாமல் போனது என நகராட்சி சார்பில் கூறப்பட்டது. பயனற்ற இந்த கட்டடத்தை தீயணைப்பு துறை அலுவலகம் கட்டுவதற்கு நகராட்சி வழங்கலாம். அல்லது நகராட்சியின் வேறு அலுவல்களுக்கு பயன்படுத்தலாம் அல்லது வேறு பயன்பாட்டிற்கு விட நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.