உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மீண்டும் இருளில் தவிக்கும் தேனி மதுராபுரி விலக்கு தொடரும் விபத்து அபாயம்

மீண்டும் இருளில் தவிக்கும் தேனி மதுராபுரி விலக்கு தொடரும் விபத்து அபாயம்

தேனி: தேனி மதுராபுரி விலக்கில் உயர் மின்கோபுர விளக்குகள் கண்துடைப்பாக சீரமைக்கப்பட்டதால் பழுது நீக்கிய இரண்டே நாளில் மீண்டும் இருள் சூழ்ந்து விபத்து அபாயம் நீடிக்கிறது.தமிழகத்தின் வடமாவட்டங்களில் இருந்து தேனி நகர் பகுதிக்கு வருபவர்களின் நுழைவாயிலாக மதுராபுரி விலக்கு பகுதி உள்ளது. இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் விளக்குகள், சிக்னல்கள் பராமரிக்கப்படுகிறது. மதுராபுரி விலக்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய, மாநில நெடுஞ்சாலைத் துறை ரோடுகள் சந்திக்கின்றன. இந்த சந்திப்பில் நகாய் சார்பில் உயர்கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களாக விளக்கு எரியாமல் இருள் சூழ்ந்து இருந்தது. இதனை சுட்டி காட்டி சில தினங்களுக்கு முன் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனைத்தொடர்ந்து உயர்மின் கோபுர விளக்குகள் பழுதுநீக்கி எரிய துவங்கின. இந்த விளக்குள் இரு நாட்கள் மட்டுமே பளிச்சிட்டன. தற்போது மீண்டும் விளக்குகள் பழுதாகி அந்த பகுதியே இருள் சூழ்ந்து உள்ளது. விளக்குகள், சிக்னல் லைட் செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி