மேலும் செய்திகள்
கூடைப்பந்து: இந்தியா தகுதி
16-Jun-2025
தேனி: தெற்காசிய போட்டிகளுக்கான இந்திய கூடைப்பந்து போட்டியில் தமிழகஅணியில் முதலிடம் பெற்று தங்கம் வென்றது.இந்த அணியில் தேனி விளையாட்டு விடுதி மாணவர் சுஜீத் 16, இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சுஜீத். இவர் தேனி மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி கூடைப்பந்து பயிற்சி பெற்று வருகிறார். தேனி நாடார் சரஸ்வதி பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இவர் தெற்காசிய போட்டிகளுக்கான 16 வயதிற்குட்பட்டோருக்கான கூடைப்பந்து அணியில் இடம் பெற்றார். மாலத்தீவில் கடந்த வாரம் நடந்த போட்டிகளில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு அணிகள் மோதின. இதில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. மாணவர் சுஜீத் தேனி விளையாட்டு விடுதியில் பத்தாம் வகுப்பில் இருந்து பயிற்சி பெற்று வருவதாகவும், 2024 மாநில கூடைப்பந்து அணியில் தேர்வாகி கொல்கத்தாவில் நடந்த போட்டியில் தமிழக அணி தேசிய அளவில் வெண்கலம், 2025 தங்கம் வென்றுள்ளனர் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் தெரிவித்தனர்.
16-Jun-2025