உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கவர்னர் மாளிகை விழாவில் பங்கேற்கும் தேனி மாணவிகள்

கவர்னர் மாளிகை விழாவில் பங்கேற்கும் தேனி மாணவிகள்

தேனி : சென்னை கவர்னர் மாளிகையில் இன்று நடக்கும் குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த தலா ஒரு பள்ளி, கல்லுாரி மாணவிகள் தேர்வாகி உள்ளனர்.தமிழக கவர்னர் ரவி உத்தரவில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு அரசியலமைப்பு தின மாநில கட்டுரைப் போட்டிகள் கடந்த நவம்பரில் நடத்தப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உருவாக்கம், முக்கிய நிகழ்வுகள், சமூக நீதிக்கான பாதுகாப்பு அம்சங்கள், அடிப்படை கடமைகள், உரிமைகள், பெறுப்புகளை சமநிலைப்படுத்துதல் உள்ளிட்ட தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு இன்று(ஜன.,26) சென்னை கவர்னர் மாளிகையில் நடக்கும் குடியரசு தினவிழாவில் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. கல்லுாரி பிரிவில் ஆண்டிப்பட்டி அரசு கலை, அறிவியில் கல்லுாரி கணித துறை 3ம் ஆண்டு மாணவி சோனியா மாநில அளவில் 2ம் இடமும், ஆண்டிப்பட்டி ஜக்கம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவி தீக்ஷா மாநில அளவில் மூன்றாம் பரிசும் வென்றுள்ளனர். இவர்கள் இன்று கவர்னர் மாளிகையில் நடக்கும் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மணவர்கள் பெற்றோருடன் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ