மேலும் செய்திகள்
அபராதம் போதாது வேறு தண்டனைகள் தேவை!
06-Dec-2024
பெரியகுளம்: ரோட்டில் சுற்றி திரியும் மாடுகளுக்கு தலா ரூ.ஆயிரம் அபராதம் விதிக்க தென்கரை பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.பெரியகுளம் தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட ஜே.ஆர்.ஆர்., நகர், பாரதிநகர் மற்றும் மூன்றாந்தல் பகுதியிலிருந்து கல்லூரி விலக்கு ரோடு வரை ஏராளமான மாடுகள் சுற்றி திரிகிறது. இவைகள் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கு இடையூறாக திரிகின்றன. மாடு வளர்ப்பவர்கள் அதனிடமிருந்து பால் கறந்துவிட்டு ரோட்டில் கழற்றி விடுகின்றனர். இதனால் தினமும் யாராவது ஒருவர் மாடு முட்டி காயப்படுகின்றனர். இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்துள்ளது.பேரூராட்சி தலைவர் நாகராஜ், செயல்அலுவலர் குணாளன் கூறுகையில்,'ரோட்டில் கழட்டி விடும் மாட்டின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இனிமேல் பிடிபடும் ஒவ்வொன்றிற்கும் தலா ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்', என்றார்.
06-Dec-2024