கொரோனா பரவல் இல்லை அச்சப்பட வேண்டாம்
தேனி: 'மாவட்டத்தில் கொரோனா தொற்று இதுவரை கண்டறியாத நிலையில் பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை,' என, மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பும் இல்லை. அதனால் தேவையற்ற அச்சம் ஏற்பட வேண்டிய அவசியம் இல்லை. பெரியகுளம் அரசு மாவட்ட மருத்துவமனை, ஆண்டிபட்டி, சின்னமனுார், உத்தமபாளையம்,கம்பம் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட வட்டார சுகாதார நிலையங்கள், நகர்நல நலவாழ்வு மையங்களில் பணிபுரியும்டாக்டர்கள், பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் பொது மக்கள் அடிக்கடி கைகளை சோப்பிட்டு கழுவ வேண்டும்,அதிக மக்கள் கூடும் இடங்களான வங்கி, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், வழிபாட்டு தலங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வது அவசியம், என்றார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4m1dgsqf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0