உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மெத்தபெட்டமைன் வைத்திருந்த மூவருக்கு குண்டாஸ்

மெத்தபெட்டமைன் வைத்திருந்த மூவருக்கு குண்டாஸ்

தேனி: மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த இளைஞர் உட்பட மூவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டார் மெத்தப்பெட்டமைன் வைத்திருந்த கம்பம் காமாட்சிஅம்மன் கோவில் தெரு சாகுகேஷ் 20, என்பவரை கம்பம் தெற்கு போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். அவருக்கு விற்பனை செய்த பெங்களூரு விஜயநகர் ஜேசன் கிறிஸ்டோபரையும் கைது செய்தனர். கடந்த மாதம் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மேல்மங்கலம் சுருளிமுத்து 51, என்பவரை பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் செப்., 25ல் கைது செய்தனர். இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பி., சினேஹா பிரியா கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிற்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தர விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !